H பெரும் உழைப்பாளிகளாய் இருந்த அந்த மக்கள் தங்களுடன் கொண்டு வந்தது சலியாத உழைப்பை மட்டுமே . தென் தமிழ்நாடு அவர்களை வரவேற்ற அளவு மக்கள் வரவேற்கவில்லை .ஆனால் மிக்க புத்தி சாதுர்யம் மிக்க இந்த மக்கள் சிறிய அளவு நிலங்களில்* தங்களிடம் இருந்த தரமான விதைகளை கொண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டனர் . ஊரின் எல்லையில் தங்கள் குடி இருப்பை அமைத்து கொண்டனர். இவர்கள் நமக்கு போட்டி இல்லை என்ற நினைப்பில் அவ்வூர் மக்கள் இவர்களை விட்டு விட்டாலும் இவர்களின் கடும் உழைப்பின் பலன்களை விடவில்லை . இவர்களின் கோழிகள் அவர்கள் வீட்டு குழம்பில் கொதித்தன . அசந்த நேரத்தில் இவர்களின் கொழுத்த ஆடு மாடுகள் தூர சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன . அந்த மக்கள் தங்கள் பொறுமையாலும் இடையறாத உழைப்பினாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர் . சிறு வயதுக்காரர்களின் கோபம் பெரியவர்களின் அறிவுரையால் அடக்கப்பட்டது.வெள்ளை துரைகளும் துரைசாணிகளும் ஓய்வெடுக்க மலை உச்சியில் ஒரு ஊர் அமைக்கப்பட்டது (Kodaikanal) இவ்வழியே சென்ற அவர்களுக்கு இந்த மக்களின் உழைப்பும், உபசரிப்பும் பிடித்தமாக இருந்தது . அது சிலரின் பொறாமையை கிளறி விட்டது . சில சங்கடங்களை கொண்டு வந்தது . அந்த ஊர் ''லக்ஷ்மி நாராயண பெருமாள் புரம்'' என்ற சிறிய ஊர் .
* ஜமீன்களின் சுக போக வாழ்வால் கவனிப்பு இன்றி பெருமளவு விளை நிலங்கள் தரிசாக இருந்தது . தன்னால் இயன்ற அளவு ஒருவன் கல்லை தூக்கி எரிந்து அந்த நிலத்தை தன் வசமாக்கிக் கொண்டு விவசாயம் செய்யலாம் . ஆனால் வரி வசூல் செய்ய ஜமீன் ஆட்கள் தப்பாது வந்து விடுவார்கள் .
Great.....l expecting more from you.
ReplyDeleteThis is the first time iam looking our roots and forefather stories,iam expect more from your end
ReplyDelete