ரங்கூன் பாட்டி - சிலரின் பெயரை சொல்லும் போதே அவர்களின் அன்பையும் பிரியத்தையும் நாம் சேர்ந்து உணர்வோம் . இந்த பெயர் அப்படிப்பட்ட ஒரு உணர்வை எங்கள் எல்லோருக்கும் தரும் .
இங்கிருந்த சொத்துக்களை பராமரித்துக்கொள்ளுங்கள் என்று சொந்தங்களிடம் விட்டு விட்டு பர்மாவுக்கு சென்ற அந்த தம்பதியை அந்த தேசம் அணைத்துக்கொண்டது . மிக கடினமான உழைப்பு , இயற்கை என்று எல்லாம் துணை செய்ய மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர்.

பதினாறும் பெற்ற பெரு வாழ்வு . ஆமாம் ,மொத்தம் பதினாறு குழந்தைகள்.
வீட்டில் பெண்கள் சமைத்து கொண்டே இருக்க வேண்டும் . வேலை ஆட்களும் குழந்தைகளும் , தொழுவம் நிறைந்த மாடுகளும் என எப்போதும் திருவிழாதான்.
மீன் வேணுமா? "எய்யா !!அழகர்சாமி !! போயி கொச்சம் மீனு எதுகு ராயா !!( போய் கொஞ்சம் மீன் எடுத்துட்டு வாப்பா !) பாத்திரத்தோடு வயலுக்கு சென்றால் நெல்வயலில் தேக்கிய நீரில் இருந்து வேணுமான அளவு மீன் வீட்டுக்கு வந்து விடும்! நீரும் நீருடன் இணைந்த வாழ்வும் அற்புதமாக இருந்தது .
ரங்கூன் பாட்டி ( நங்கள் பார்த்த போது தான் பாட்டி . இந்த இடத்தில் நடு வயதுதான். ஆனால் இப்படி கூப்பிட்டால்தான் என்னால் கதை சொல்ல முடியும்) தன் மூத்த மகள் லக்ஷ்மம்மாவை தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தார் . எல்லோரும் கூட்டு குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

வயலில் காய்கறிகளும் நெல்லும் மூட்டை மூட்டையாக விளைந்தது! தங்களின் வேலையாட்களுக்கும் பங்கிட்டு அளித்தனர்.போரும் புரட்சியும் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களின் நல்ல நேரம் சில சின்ன பெரிய சங்கடங்கள் தவிர வேறு இடையூறுகள் இல்லை.
அந்த நாள் 1946 இன் கடைசி மாதத்திலோ 1947 இன் முதல் மாதத்திலோ இருக்க வேண்டும் .பக்கத்து தோட்டத்தில் இருந்து குருசாமி இவங்க வீட்டுக்கு வந்து கதவை தட்டும் போது நட்ட நடு நிசி . மிக பதட்டமாக இருந்தார் . கைகள் விடாது நடுங்கியவாறு இருந்தது! அவரை பெரும்பாடுபட்டு சமாதானம் செய்ய வேண்டிஇருந்தது ... "எண்ணா !!ஒதினே !! நாம மோசம் போயிட்டோம் !! என திடீரென தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார் .
"ஒய் !!குருசாமி என்னப்பா தங்கச்சிக்கு உடம்பு எதனா
சௌக்கியமில்லையா ??"
எண்ணா !! இப்ப "யோங்கோன் " னும் அவன் சம்சாரமும் வீட்டுக்கு வந்து ஒரு தகவல் சொல்லிட்டு போனாங்க ! அவன் முதலாளி அரசாங்கத்துல முக்கியமான ஆளு .சப்பான்காரன் உள்ள பூந்த இந்த நேரத்த சாக்கா வச்சு நம்மள அடிச்சு விரட்ட இவனுங்க ஒரு திட்டம் போட்ட மாதிரி இருக்காம் ! சப்பான்காரனும் அநேகமா குண்டு போடுவான் போல இருக்காம் ! பிள்ள குட்டிங்கள வச்சுகிட்டு என்ன செய்ய போறோம்னு ஒன்னியும் புரியலண்ணே!!சின்ன பிள்ளை போல விசும்பி அழுதார்.
பெண்கள் குரல் எடுத்து அழ ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் அரைகுறை தூக்கத்தில் கத்த ஆரம்பித்தனர். ஒரே அதட்டல் போட்டார் தாத்தா ..
"இப்புடு ஏமிட்டிகி ஈ கூத்தலு !! (இப்ப ஏன் இப்படி கத்துறிங்க ?)
இது என்னைகின்னாலும் வரும்னு தெரிஞ்சதுதானே !!
கேளு குருசாமி !!, யோங்கோன் சொல்றதை நாம முழுசும் நம்ப முடியுமா? ன்னா முடியாது!!
ஆனா உள்ளூர் ஆளுங்களுக்கு வன்மம் இல்லேன்னு நினைக்க, நாம ஒன்னும் பச்ச குழந்தைங்க இல்லே! எங்க இருந்தோ வந்தவங்க கிட்ட கூலியாளா இருக்கிறது ஒவ்வொருத்தன் மனசுலயும் இருக்கும்!! எங்கயும் இருக்கிறதுதானே ?!! இது வரைக்கும் நாம தெளிவா இருந்தது பெரிய விஷயம் இல்லே !!இனிமேட்டு தான் ரொம்ப தெளிவாவும் தைரியமாவும் இருக்கணும் . அத விட்டுட்டு அழுதா எப்பிடி?
விவேகத்துடன் அவர் பேசியவுடன் அனைவரின் முகத்திலும் தெளிவு வந்தது . கண்ணை துடைத்துக்கொண்ட குருசாமி ," நீங்க சொன்ன மாரி ஒக்காந்து அழுதா தீந்து போகும்னா இன்னிக்கு பூரா அழுகலாம் !! ஆனா நம்ம சுமைய நாமதான சொமக்கணும் !! காலையில நம்ம ஆளுகளை கூட்டிட்டு வரேண்ணே . பேசலாம்" என்று விட்டு தளர்வுடன் வெளியேறினார் .
கனத்த மனதுடனும் ,இனம் புரியாத பயத்துடனும் ஆளுக்கு ஒரு மூலையில் முடக்கிக் கொண்டனர்.
சிறு வயதில் பெரியவர்கள் செய்யும் சில விசயங்கள் இப்போது நினைவில் வருகிறது !! ஏதாவது கஷ்டத்தில் மனசு மிக சலனப்படும் போது அவர்கள் தினப்படி வேலையுடன் மிக ஒன்றி கவனத்துடன் , செயல்படுவதை கவனித்து இருக்கிறேன். அது ஏன் என இப்போது தெளிவாக புரிகிறது. முடிவெடுக்க முடியாத ஒரு பிரச்னை வரும்போது தியானம் செய்ய சொல்லி இப்போதைய CARPORATE குருமார்கள் சொல்வதை அவர்கள் போகிற போக்கில் செய்துள்ளனர்!
பாட்டி வெள்ளனே எழுந்து குளித்து சூரியனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ,வெண்கல விளக்கையும் , பூஜை சாமான்களையும் பளபளவென தேய்த்து துடைத்தார் . வீட்டில் இருந்த மிகப்பெரிய கிருஷ்ணர் படத்தின் முன் அதை வைத்து விளக்கேற்றி விட்டு விழுந்து கும்பிட்டார். கண்களில் நீர் குளம் கட்டியது. இரு கையை கூப்பி ,
"ஏமி அவ்வினானு சூஸ்தமுரா கிட்ணா! ,நுவ்வு மட்டு மா கூடனே வுண்டு! (என்ன ஆனாலும் பாக்கலாம்டா கிருஷ்ணா! நீ மட்டும் எங்க கூடவே இரு!)
கிருஷ்ணரை துணைக்கு அழைத்த பாட்டியின் பயணம் அதன் பின் நிற்கவே இல்லை !

No comments:
Post a Comment